Sunday, December 5, 2010
விழி தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
 தேடியலைகிறேன்
என் காதலின் தடங்களை......
நீ விட்டுச் சென்ற மீதி உயிர்
 கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் வேண்டாம் அன்பே .....
உன் உடைக்க முடியா பதிலில்
தோற்றுப்போய்,
 இது நட்பு என்றே
ஒத்துக்கொள்கிறேன்.
மீண்டும் வா!
 நொறுங்கிப் போன என் கனவுகளையும்,
மீதமிருந்தால், இதயத்தையும்
ஒட்டிப்பார்த்து உயிர்க்கொடுக்க
 முயற்சி செய்யலாம் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 அவன் வரப்போவதில்லை,
 இறுதிவரை வரப்போவதில்லை
என்று இதயம் நொடிக்கொருமுறை
ஞாபகப்படுத்தியும்,
 அவன் வராத வழியை நோக்கியே
காத்திருக்கின்றன தூக்கமிழந்த
என் ஈர விழிகள்.....
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் ஏன் இப்படி ??
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
 கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ??
அவன் வருவதற்கு முன்பிருந்தே
 இவ்வுலகை ரசித்தேனே ???
பிறகேன் இப்படி ??...
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
 அவன் நினைவுகள் என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ???
உனக்கு மாற்றம் வேண்டும்....
 அவன் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
 தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள் எனக்கு நானே
 கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
 அவன் நினைவுகள் தூரமாயின.
சில பூக்களும் என்னை வாழ்த்த விழைந்தன
 தற்செயலாய் அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
 கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவன் நினைவுகளை விட்டுப் பயணிக்க முயன்ற
 என்னைப் பற்றி, ஏளனமாய், 
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
 எனக்காக அவன் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள் ...........
                                                    நட்புடன் ...
                                                     ரேவதி                          
 
 
Currently have 0 comments: