Saturday, December 4, 2010

உற்றவனே....

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |

விடியும் இரவுகள் எல்லாம்...
உன் விழிகள் கொண்டே...
என் இமைகள் திறக்கிறேன்....
 
உன் தோள் சாயும்...
ஒவ்வொரு வினாடியும் உணர்வேன்...
தாய்மையின் ஸ்பரிசத்தை...
காதலாய்.. நீ ஆதரிக்கும்....
அந்த நிமிடங்களில்..
மட்டும் உணர்வேன்...
என் இருப்பின்... நிறைவை...!
 
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம், காதல் என மெல்ல
மிக மெல்ல முன்னேறியது
உனக்கென நான் மட்டும்
 இருந்து இருப்பேனென
புரிதல் உண்டானது....

பிணைக்கப்படா நேசமாக...
எதிர்ப்பார்க்காத உறவாக...
எதையும் எதிர்பாராமல் ...
என் காதலை மட்டும்
கேட்டவனே.. ...

உணர்வாய்
என் உயிர் தருகிறேன்...
நீ இறக்கும் போது
உடன் எடுத்துச் செல்ல....
 
                                                     பிரேமலதா 

Currently have 0 comments:


Leave a Reply