Saturday, December 4, 2010

உயிரின் விளக்கே..

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |


 

உயிரின் விளக்கே...
சொந்தமும் பந்தமும் அற்றுப் போனேன்
சுற்றமும் நட்பும் நீயானாய் !
காமம் மட்டுமே கடக்கும் காதலில்
காதல் மட்டுமே கண்டவன் நீ..! - உனை
கண்டவனாக விடமாட்டேன்....

வலியையும் வழியையும் மறந்து நின்றேன்
வசந்தமும் வாழ்வும் நீயானாய் !
தூக்கமின்றி தொடரும் துக்கத்தில்
தூக்கம் கொடுத்த தூயவன் நீ..! - உனை
தூரத்தில் நிறுத்திட மாட்டேன்....

ஊனும் உயிரும் வெறுத்திருந்தேன்
உணவும் உணர்வும் நீயானாய் !
மௌனம் மட்டுமே தொடரும் வாழ்வினில்
மொழி கொடுத்த மன்னவன் நீ..! - உனை
மறந்து இருந்திட மாட்டேன்...

சோதனையும் வேதனையும் கடந்து நின்றேன்
சோதியும் சொர்க்கமும் நீயானாய் !
ஒளியின்றி ஒற்றையாய் இருளில் மறைந்திருந்தேன்
ஒளி கொடுத்த உத்தமன் நீ...! - உனை
உதறிவிட்டு ஓடிவிட மாட்டேன்...

பொன்னும் பொருளும் விலக்கி வைத்தேன்
புன்னகையும் புதையலும் நீயானாய் !
சோகம் மட்டுமே வளரும் சரித்திரத்தில்
சுகம் கொடுத்த சத்யன் நீ...! - உனை
சோகப்படுத்தி சுகப்பட மாட்டேன்...
                                              பிரேமலதா 

Currently have 0 comments:


Leave a Reply