Saturday, November 13, 2010

இளமையில் கல்!

Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category: |

 

குடும்பச் சுமைகள்

தலைதூக்கக்;
கரம் போகும்
தலைக்குச்
சுமை தூக்க!

எங்களைப்
படம் போட்டுப்
பணம் பார்க்கும்
பத்திரிகைகள்!

தூரமாய் நின்று;
ஓரமாய் சென்று;
முழக்கமிடும்
சமூக ஆர்வலர்கள்!

ஏக்கத்துடன்
பாடசாலையைத்
தேட்டத்துடன்
கடந்துச் செல்லும்போது
காதில் விழுந்தது
இளமையில் கல்!

Currently have 0 comments:


Leave a Reply