Saturday, November 13, 2010

சிந்தனை துளிகள்... sinthanai thulikal

Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category: |


Join Only-for-tamil 
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!




Join Only-for-tamilசந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.



Join Only-for-tamilஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி




Join Only-for-tamilவள்ளலுக்கு பொன் துரும்பு.
சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு



Join Only-for-tamilஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.


Join Only-for-tamilஒரே குறிக்கோள்
எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?


Join Only-for-tamil”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.



Join Only-for-tamilஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.



Join Only-for-tamil
உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்



Join Only-for-tamil
நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்



Join Only-for-tamil”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
விரும்பியும் திரும்பாது!



Join Only-for-tamil”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்

Join Only-for-tamil”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்



Join Only-for-tamilவாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்

Join Only-for-tamilசிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்


Join Only-for-tamilரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.