Saturday, November 20, 2010
பெண்ணே !
நான் எழுதியக் கடிதம் 
உன்னிடம் சேரும் முன்னே - நீ 
மற்றவனை  கை பிடித்தாய்.....
பூக்கள் கூட காய்ந்து சருகாகிதா
தூக்கி எறியப்படும் - ஆனால்
என் காதலோ மொட்டாகும் முன்பே 
சருகாகியது.....
மனதை தேற்றி  மறுநாள் 
நடந்தேன் சாலையில் 
நடந்த சாலையோ  பழகியதுதான் 
ஏனோ ஒரு வித்தியாசம்  - சற்று 
நின்று திரும்பும்போதுதான் 
தெரிந்தது என்னை பின் தொடர்ந்த 
நிழல் என்னிடம் இல்லை என்று ...
நிழலை தேடி திரிந்தேன்  - அங்கு 
சாலையின் எதிர்புறம் நீ - உன் 
கணவனோடு கைகோர்த்தபடி...
சற்று உற்று பார்தால் என் 
நிழலோ உனக்கு குடையாக....
சூரியனின் பார்வை உன் மீது 
விழாமல் உன்னை மட்டும் 
தொடர்ந்தது என் நிழல் மட்டும்....
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: