Saturday, December 4, 2010

குடும்பத்தினருக்கு ஒரு மடல்...

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |

 
பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள்,
புது மனைவி, அரட்டை அடித்த நண்பர்கள்
காலாற நடந்து திரிந்த கிராமம்...
எல்லாம் விட்டுப் பிரிந்தோம் - எம்மை
எதிர்பார்த்து  நிற்கும் குடும்பத்தைக்
கரையேற்றுவதற்கு...

சொர்க்க சுகத்தைத் தரும் சொந்தங்களை
சோர்வுறாமல் காப்பதற்கு
தோள் கொடுத்தது வெளிநாடு தான்...

இன்று நரகத்தில் இருந்தாலும்,
இறுதிவரை சொர்க்கத்தில்
இருப்பதற்கு ஆசையுண்டு.
இதனாலேயே இன்று இங்கு
இடி தாங்கிகளாகி விட்டோம்.

பிரிவு என்பது கொடுமை தான் - ஆனால்
இதயங்களினால்  சேர்ந்தே இருக்கிறோம்
இனிய நினைவுகளினால் பிரிவுத் துயரை
பின் தள்ளிவிடுகின்றோம்.

வாய்ப்புகள் வருவது அபூர்வம்...
வரும் வாய்ப்பைத் தவிர்ப்பது அறிவீனம்...
வாழ்வே எதிர்நீச்சல் தானே...
எதிர்காலத்தில் வரப் போகும் சூரிய ஒளிக்காக...
இன்று நாம் மெழுகுவர்த்திகளாகி இருக்கின்றோம்...

இது கூட இன்பம் தான்...
எம் இனிய குடும்பமே! கலங்காதீர்கள்...
இன்றும் என்றும் இருப்போம் உங்கள் நினைவுகளுடன்...
இணைந்து விடுவோம் உங்களுடன் வெகு விரைவில்....

அதுவரை...
ஆறுதல் உங்களது அன்பு ஒன்று தான் எமக்கு!

நாடு விட்டு வாழும் நண்பர்களின் சார்பில்,
அபிராமி

Currently have 0 comments:


Leave a Reply