Saturday, November 13, 2010
பசி... Pasi dont waste food
Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category:
கவிதைகள்
|
குடல்கள் கதறக்
கண்கள் இருட்ட;
செவி புடைக்க;
பெயர் சூட்டு விழா
பசிக்கு!
குடைச்சல் கொடுக்கும்
குடலுக்கு;
துவண்டுப் போகும் எங்கள்
தோள்கள்;
நிமிர முடியா முதுகெலும்பால்
குனிந்து போகும் எங்கள் தலை!
மிச்சம் மீதியை எச்சிலாக்கி
எரிச்சல் அடைந்து
தூக்கி எறியும் சமூகம்!
மிச்ச மீதியையும்
மச்சம் என நினைத்துப்
புன்னகை பூக்கும்
எங்கள் வயிறு!
உணவைக் கொட்டும் முன்னே
சற்றே சுற்றிப் பாருங்கள்;
எனைப்போல ஏராளம் உண்டு;
உங்களுக்குக் கெட்டுப் போனவையை
நாங்கள் ஏற்றுக்கொள்வோம்
தாராளம் என்று!
கிடைக்கிற உணவிற்கு
மனம் குளிர்ந்து
நன்றி நவிலுங்கள்
மறையோனுக்கு!
கண்கள் இருட்ட;
செவி புடைக்க;
பெயர் சூட்டு விழா
பசிக்கு!
குடைச்சல் கொடுக்கும்
குடலுக்கு;
துவண்டுப் போகும் எங்கள்
தோள்கள்;
நிமிர முடியா முதுகெலும்பால்
குனிந்து போகும் எங்கள் தலை!
மிச்சம் மீதியை எச்சிலாக்கி
எரிச்சல் அடைந்து
தூக்கி எறியும் சமூகம்!
மிச்ச மீதியையும்
மச்சம் என நினைத்துப்
புன்னகை பூக்கும்
எங்கள் வயிறு!
உணவைக் கொட்டும் முன்னே
சற்றே சுற்றிப் பாருங்கள்;
எனைப்போல ஏராளம் உண்டு;
உங்களுக்குக் கெட்டுப் போனவையை
நாங்கள் ஏற்றுக்கொள்வோம்
தாராளம் என்று!
கிடைக்கிற உணவிற்கு
மனம் குளிர்ந்து
நன்றி நவிலுங்கள்
மறையோனுக்கு!
Subscribe to:
Post Comments (Atom)
மிகவும் அருமையான ஆழமான வரிகள்