Saturday, December 4, 2010
காதலே உன்னை வலை
போட்டு தேடியதில்லை…
சுவாச காற்றிலும்  உன்
 பெயர் சொல்லியதில்லை…
உணர்வில் கூட காதல்
எண்ணம் இருந்ததில்லை…
 காதல் கொள்ள இதுவரை
ஆசை மனதில் வந்ததில்லை!
~~~~
 புதுசாக பூத்த காதல் – அதிசயமாய்
என்னை மாற்றிய போதும் – மனதிலே
கோலங்கள் அழியாமல்  உன் முகம்
 அதிலே தெரியுதடா!
~~~~
புதியதாக என் மனதில் நீ பிறந்தாய்
 அன்று காதல் பூவை என்னில் மலரவைத்து
எண்ணங்கள் அத்தனையும் உனக்காக மாற்றிவிட்டு
 உன் காதலியாய் என்னை உருமாற்றி செல்கிறாய்!
~~~~
இதமான மலர்க்கூட்டம் இணையக் கேட்டேன்
 வெட்கத்தில் என் முகம்  சிவக்க கேட்டேன்
வீசும் காற்றில் அவன் சுவாசம்
என்னை தழுவி  செல்ல வேண்டும்
 இதயங்கள் இரண்டும் இணையத்தான்
எண்ணங்கள் ஒவ்வொன்றும்
ஒன்றாக வேண்டும்  என்றேன்!
 ~~~~
இதயத் துடிப்பும் இன்று – காதல்
துடிப்பாய் மாறத்தான் – காதலன்
 உன் பெயரை இதயம்
மறக்காமல் சொல்லுதடா!
~~~~
 தனிமையில் தவிக்க வைக்கும் காதல்
மனதை சிறையில் அடைத்து விட்டு
தனித்துவமாய் என்னை சிந்திக்க வைக்குதடா.!
 ~~~~
நட்சத்திரம் பூத்திருந்தாலும்
நிலாவிற்கே மதிப்பதிகம் – எத்தனை
 உறவுகள் என் எதிரில் வந்தாலும்
காதலன் உனக்கே அன்பதிகம்.!
~~~~
 ஒளி தரும் நிலவு
பக்கத்தில் இல்லை என்று
கவலைப்பட்டால் கிடைப்பதில்லை
 காதலன் நீ இல்லை என்று
மனம் வருந்தினால் போதும்
மனதிலே நினைவாகவோ
 நேரிலே நிஜமாகவோ
என் எதிரே வருகிறாய்!
~~~~
 எத்தனை உறவுகள் எனக்கிருந்தும்
இன்று உயிர் தேடும் உறவாக
உன்னைத் தேடுகிறேன்!
 ~~~~
                                                 நட்புடன்...
                                    ரேவதி 
 
 
Currently have 0 comments: