Sunday, November 14, 2010

ப்ரியமானவனே ...... Piriyamanavane

Posted by K. Ezhil Kumar | Sunday, November 14, 2010 | Category: |


அன்பை அழகாய் கொடுத்தவன்   நீ.....
பிரிவையும் பிரியமாய் கொடுத்து சென்றுவிட்டாயே...
இடியும் மின்னலும் தாங்கியவள்  உன்
மௌனம் தாங்க முடியவில்லை!

பன்னீர்ப் பூவாய் வளர்ந்தவள்  -  இன்று
கண்ணீர்ப்பூவாய் நின்று சரிகின்றேன்...
கண்கொண்டு காணாமல் இருப்பதால்
எனது இமைகளும் சுமையாகி போனது!

காற்றுப் புகாத நெருக்கத்தில் உன்னுடன்
கலந்து உறவாட விரும்பியவள்  -  இன்று
கனவுகளை கொன்று புதைத்து விட்டு
கற்பூரமாய் கரைந்து எரிகின்றேன்....

வந்துபோகும் வானவில்லாய்  காதலை - நான்
வளர்க்கவுமில்லை நினைக்கவுமில்லை....
விரிந்து கிடக்கும் விண்ணும் மண்ணுமாய்
நெஞ்சோடு நிறைத்திருக்கின்றேன்!

சிந்தை நிறைந்த மனது - உன்னை
மட்டும் சொந்தம் கொண்ட மனது
உன் ஒலி இல்லாமல் வலியோடு
செத்துப்போய் கிடக்கின்றது!

இதயம் எடுத்து நினைவை கொடுத்து
மாயமாய் மறைந்த மதி நிறைந்தவனே ...
உன் நேசம் வேஷமென்று உன்னைப்
புதைத்த நெஞ்சுக்குழி உரைக்கிறது!

நிலம் பார்த்து வாழ்ந்தவள் -  இன்று
நிஜம் பார்த்து தவிக்கின்றேன் - நீ
வளமாய் வாழ வாழ்த்திச் செல்கின்றேன்
உயிர் துறந்து சென்றாலும் உனக்காய்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவேன்!
அதே நேசமுடனும் பாசமுடனும்...
பிரேமலதா 

Currently have 0 comments:


Leave a Reply