Sunday, August 26, 2012

சென்னையில் டிராம் வண்டிகள் வரலாற்று சுவடுகள் !!!

Posted by K. Ezhil Kumar | Sunday, August 26, 2012 | Category: | 0 comments

இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகே அமெரிக்காவில் டிராம்கள் ஓடத் தொடங்கின.* துறைமுகத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லவும் டிராம் வண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

 இந்த வண்டிகளுக்கான மின்சாரம், பேசின் பிரிட்ஜில் இருந்த மின் நிலையத்தில் இருந்து தருவிக்கப்பட்டது.

மவுண்ட் ரோட்டில் மாட்டு வண்டிகளும், குதிரை வண்டிகளும் ஓடிக் கொண்டிருந்த காலத்தில், மெட்ராஸ்வாசிகளை மெய்சிலிர்க்க வைத்தவைதான் டிராம் வண்டிகள். இன்றைய தலைமுறை 'மதராசபட்டினம்' போன்ற படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்க முடிந்த டிராம் வண்டிகள், மெட்ராஸ் மாநகரில் சுமார் 80 ஆண்டுகளாக மாங்கு மாங்கென்று ஓடி இருக்கின்றன.

1877இல்தான் மெட்ராஸ்வாசிகளுக்கு டிராம் வண்டி அறிமுகமானது. ஆனால் அப்போதெல்லாம் குதிரை இழுத்துச் செல்லும் டிராம் வண்டிதான் புழக்கத்தில் இருந்தது. மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. 



இதற்காக 1892இல் மெட்ராஸ் டிராம்வேஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் பவுண்ட் செலவில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி, Messrs Hutchinson & Coஎன்ற லண்டன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஆனால் 3 ஆண்டுகள் கடின உழைப்பிற்கு பிறகே எலெக்ட்ரிக் டிராம்களை அவர்களால் சென்னையில் இயக்க முடிந்தது.

மே 7, 1895இல் சென்னை நகர வீதிகளில் முதன்முறையாக எலெக்ட்ரிக் டிராம்கள் ஓடின. இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் டிராம் ஓடுவது அதுதான் முதல்முறை. அவ்வளவு ஏன், அந்த சமயத்தில் லண்டன் போன்ற மாநகரங்களில் கூட எலெக்ட்ரிக் டிராம்கள் அறிமுகமாகவில்லை. எனவே எந்த விலங்கும் இழுக்காமல் தானாக நகரும் இந்த பெட்டி வண்டியை மக்கள் சற்றே மிரட்சியுடன் பார்த்தார்கள். அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக சில காலம் வரை ஓசிப் பயணம் எல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

சேவையை தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள். அதாவது மே 6ந் தேதியுடன் ஓசி பயணம் முடிவு பெறுகிறது, மே 7 முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு மைலுக்கு சுமார் 6 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இன்றைய பேருந்து போல வண்டியில் ஏறியதும் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஓட்டுநரும், கண்டக்டரும் காக்கி யூனிபார்ம் அணிந்திருப்பார்கள். திடீரென டிக்கெட் கலெக்டர் ஏறி, பயணிகள் அனைவரிடமும் டிக்கெட் இருக்கிறதா என பரிசோதிப்பார். கொஞ்ச நேரத்தில் எதிரில் மெதுவாக வரும் டிராம் வண்டியில் அப்படியே இங்கிருந்தபடி தாவிவிடுவார். டிக்கெட் பரிசோதகர்களின் இந்த சாகசங்களை வியந்து பார்க்கவே ஒரு கூட்டம் இருந்தது. 



ஞாயிற்றுக் கிழமைகளில் 6 அணா கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மாத சீசன் டிக்கெட் முறைகளும் அமலில் இருந்தன. ஒரு குறிப்பிட்ட ரூட்டில் பயணிக்க மாதம் ரூ.6, எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணிக்க ரூ.10 வசூலிக்கப்பட்டது.

சென்னையின் பல வழித்தடங்களில் இந்த டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், மவுண்ட் ரோடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என பல இடங்களுக்கும் டிராம் வண்டியில் ஏறிச் செல்லலாம். 


அப்போதெல்லாம் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட வில்லை. அதுவும் இல்லாமல், பேருந்துகள் கரியால் இயங்கிக் கொண்டிருந்தன. எனவே மின்சாரத்தில் இயங்கும் டிராம் வண்டிகளுக்கு மக்களிடம் நல்ல கிராக்கி இருந்தது. மெட்ராசில் குறுக்கும் நெடுக்குமாக கம்பளிப் பூச்சியைப் போல இந்த டிராம்கள் ஓடிக் கொண்டே இருந்தன. நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த வண்டிகளைப் பயன்படுத்தினார்கள்.
டிராம் வண்டி மக்களுக்கு வசதியாக இருந்ததே தவிர, அந்த லண்டன் நிறுவனத்திற்கு இதனால் எந்த பயனும் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் டிராம் வண்டிகளை conduit system எனப்படும் முறையில் இயக்க அந்த நிறுவனம் முடிவு செய்திருந்தது. அதாவது டிராம் வண்டி செல்வதற்காக சாலையில் தண்டவாளங்கள் இருக்கும், அதற்கு நடுவே மின்சார சப்ளைக்கு வழி செய்யும் வயர்கள் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் சில நடைமுறை சிக்கல்கள் காரணமாக, இந்த முறையை கைவிட்டுவிட்டு, தலைக்கு மேல் ஒயர்கள் போட்டு, அதில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ளும் முறைக்கு ஒப்புக் கொண்டது. இங்குதான் ஆரம்பித்தது சிக்கல்.

இந்த புதிய முறையால் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டு, 1900இல் நிறுவனத்தை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. எலெக்ட்ரிக் கன்ஸ்ட்ரக்ஷ்ன் கம்பெனி லிமிடெட் என்ற இங்கிலாந்து நிறுவனம், இதனை வாங்கி நான்கு ஆண்டுகள் வரை இயக்கிப் பார்த்தது. 



பின்னர் 1904இல் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வேஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கை மாற்றியது. அந்த நிறுவனமும் கொஞ்சம் தாக்குப் பிடித்துப் பார்த்தது. ஆனால் கடும் நஷ்டம் காரணமாக அவர்களாலும் 1953ஆம் ஆண்டிற்கு மேல் டிராம்களை இயக்க முடியவில்லை. எனவே அந்த ஆண்டு ஏப்ரல் 11ந் தேதி நள்ளிரவுடன் மெட்ராசின் டிராம்கள் கடைசியாக ஓடி ஓய்ந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அறிமுகமாகி, தங்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிப் போன டிராம்கள் திடீரென நின்று போனதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இயக்க அந்த நிறுவனமும் தயாராக இல்லை, அரசும் தயாராக இல்லை என ஏப்ரல் மாதம் அறிவித்தார் அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி. நிஜத்தில் இருந்த டிராம்கள், அந்தக் கால மெட்ராஸ்வாசிகளின் நினைவுப் பொருளாக மெல்ல மாறிப் போயின.


நன்றி - தினத்தந்தி

Saturday, August 25, 2012

தாய்மொழி

Posted by K. Ezhil Kumar | Saturday, August 25, 2012 | Category: | 0 comments



பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்

சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !

உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை

உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !

எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட

ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !


இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை

குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !

முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி

முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !

உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்

உடன்வருவது உயிரோடுக் கலந்திட்ட தாய்மொழி !


விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்

வியத்தகு விளைச்சலின் வித்தாக தாய்மொழி !

அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்

அடையாளம் காட்டிடும் அவரவர் தாய்மொழி !

சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட

ஒளியேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !


யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்கள்

சுவாசிக்கும் காற்றே பேசுகின்ற தாய்மொழி !

மனமாற்றம் செய்திட்டு மதமாற்றம் செய்தாலும்

மாற்ற இயலாதது உயிரான தாய்மொழி !

வாழும் காலம்வரை வணங்கிப் போற்றிடுவோம்

இயங்கிடும் இதயத்தின் இதயமான தாய்மொழி !

[[ இணையதளத்திலிருந்து தமிழ் தாயகத்திற்காக ]]
என்றும் உங்கள் நண்பன்
கர்ணன்





உன் இதழ்கள்!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

‘எனக்கு உன்னைப்போல


கவிதையெழுதத் தெரியாது’ என்கிறாய்.

எனக்கும்தான் உன்னைப்போல

கவிதை பேசத் தெரியாது!

*

கல்லூரியில் கூட

யாரையும் பார்த்து தேர்வெழுதியதில்லை.

காதலில் மட்டும்

உன்னைப் பார்த்துதான் கவிதையெழுதுகிறேன்.

*

கவிதையெழுதுவதில்

என் விரல்களை வென்றுவிடுகின்றன

உன் இதழ்கள்!

*

நீ கையொப்பமிட்டு தரும்

எந்தப் புத்தகமும்

கவிதைப் புத்தகம்தான்!

*

இப்படி வாசிக்க…

ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.

நேசிக்க…நீ மட்டும்தான்!


From: Mani Nila

கோபம்,ஆணவம்,திமிர் பற்றிய தொகுப்பு

Posted by K. Ezhil Kumar | | Category: | 1 comments




அடிப்பல்லில் இரண்டு

அதிகதூரம் வளர்ந்துவிட்டால்

பன்றி என்றும் யானையாகிவிட முடியாது- அதை

தந்தம் என்றெண்ணி

தற்பெருமை கொண்டு யானையிடம் புகுந்தாலது

தலைநசுங்கி சாவது உறுதி

``````````````````````````````````````````````````````````````

அளவில்லா கோபமென்றும் தன்

அழிவுக்கே துணை நிற்கும்


````````````````````````````````````````````````````````````````
கம்பனை விடவுயர் கவிஞனுமில்லை தன்னை

கம்பனாய் நினைப்பவன் கவிஞனேயில்லை


``````````````````````````````````````````````````````````````````
கவியின் திமிர் கவிதையில் புலப்படவேண்டும்

கண்டவற்றில் எல்லாம் புலப்பட்டால்

காரியமற்று போய்விடும்
```````````````````````````````````````````````````````````````````
அன்பால் வெல்லமுடியா ததெதையும்

கோபம் வென்றுவிடுவ தில்லை ,

அங்ஙனம் வென்ற யாவையும்

அன்பின் சிறப்பை கொண்டுவிடுவதில்லை

```````````````````````````````````````````````````````````````````

திறமை இருக்குமிடத்தில் திமிர் குடிபுகுந்தால் அந்த திறமையின் திறவுகோல் தொலைந்துவிடுகிறது...
```````````````````````````````````````````````````````````````````
கோபத்தை முன்னிறுத்தி காரியம்கொள்ள துடிப்பவன்

கோழைத்தனத்தின் குடியுரிமை பெற்றவனாகிறான்

``````````````````````````````````````````````````````````````````````
ஊரை குறைகூறுபவன் என்றும்

தன்குறை ஏற்கமறுப்பது இயல்பே


`````````````````````````````````````````````````````````````````````
காரணத்தோடு கோபப்படுபவன் வீரன்

காரணமின்றி கோபப்படுபவன் வீணன்

````````````````````````````````````````````````````````````````````````

`````````````````````````````````````````````````````````````````````````

அன்புடன்

கர்ணா









இந்தியா ஒளிர்கிறது

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments




தினத்தந்தி முக்கிய செய்திகள்

"பள்ளிக்கு சென்ற மாணவி கற்பழிப்பு"

"நிலத்தகராறில் தந்தை வெட்டிகொலை"

"தாசில்தார் வாங்கிய ஆயிரம் ரூபாய் லஞ்சம்"

"போலீசில் புகார் கொடுத்தவருக்கு

போலீஸ் ஸ்டேஷன் முன்னால் வைத்து வெட்டு"

" வரதட்சணை கொடுமையால்

புதுப்பெண் தீக்குளிப்பு "



சுதந்திர தின கொண்டாட்டத்தில் எங்கள் இந்தியா

இப்படியும் ஒளிர்கிறது

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

சென்னை என்ற பெயருக்கும் அங்குள்ள பல இடங்களின் பெயருக்கும் அந்த பெயர்கள் எப்படி வந்தன என்று தெரியுமா ? தொடர்ந்து படியுங்கள் :






சென்னை: -

சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.



மதராஸ் :-

முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.



கோடம்பாக்கம் -

கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.



மாம்பலம்:

மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது





மற்றொரு பெயர் காரணம்



மா அம்பலம் :-

ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.



சைதாப்பேட்டை: சதயு புரம் :

சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.



கிண்டி:-

ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.



பரங்கிமலை:-

ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).



சேத்துப்பட்டு:

மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.



எழுமூர்:

இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.



ராயபுரம்:

பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.



சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை :

சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.



தண்டையார்பேட்டை :

பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.



புரசவாக்கம்: புரசைப் பாக்கம்:

புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.



அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை:

ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.



செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு :

செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.



பெருங்களத்தூர் :

பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.



பல்லாவரம்:

பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.





பரங்கிமலை:-

பரங்கியர் என ஆங்கிலேயருக்குப் பெயர். St. Thomas Mount -ல் பரங்கிப் படையினர் வசித்ததனால், அது பரங்கிமலையாக வழங்கியிருக்க வேண்டும். மற்றோர் உதாரணம் - பரங்கிப் பேட்டை - Porto Novo - போர்த்துகீசியரின் கோட்டை - கடலூர் அருகிலுள்ளது.





பூந்தமல்லி :

பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.



நந்தம்பாக்கம்:

நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.



ராமாபுரம்:

ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.



போரூர்:

முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.





குன்றத்தூர்:

குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).



ஸ்ரீ பெரும் பூதூர்:

அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.



சுங்குவார் சத்திரம்:

பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.



நந்தனம்:-

மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.



யானை கவுணி :

திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.



மாதவரம்:

மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.





வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்:

முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.



ஈக்காட்டுதாங்கல் :

ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......



முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.



முகலிவாக்கம் :

கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.



அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.



(இணையத்தில் இருந்து)