Saturday, October 30, 2010
வரையறை சொல்ல முடியாத
வார்த்தைகளால் என்றும் கொல்லாத
உறவுகளோடு சேராத
உண்ணதமானா ஓர் பிணைப்பு .....
ஆண் பெண் பாராத
சாதி மதபேதம் தெரியாத
சாகும் வரை நீடிக்கும்
சரித்திர காவியம் நட்பு...........
உறவுகள் துரத்தும் நேரத்திலும்
பந்தங்கள் எதிர்க்கும் பாசத்திலும்
ஆறுதல் சொல்லும் ஒரு பிறப்பு
அகிலம் போற்றும் உயிர் துடிப்பு....
முகங்கள் பாரா நேரத்திலும்
முகவரி அறியா வேளையிலும்
உண்மையை மட்டும் உரசிகின்ற
உயிரான ஓர் பிறப்பு நட்பு.....
நம்மில் இருப்பது இரு கரங்கள்
கண்ணீர் துடைப்பது பல கரங்கள்
சோகத்தில் தோழ் கொடுக்கும்
உயிரான தோழமைகள்...
மறைப்பது தெரியாமல்
மனம் திறந்து பேசுவதும்
மானமென்றும் பாராது
மகிழ்ந்து சிரிப்பது நட்பு........
உயிரைக் குடிக்கும் உறவிருந்தும்
உயிரைக் கொடுக்கும் ஓர் பிணைப்பு
அரபு கடல் போலவே
ஆழமானது நம் நட்பு.........
நட்புடன்... பாஸ்கர்
*****தோழா...நீயெங்கே..!
தோழோடு தோழ் கொடுத்து
தொலை தூரம் சென்றவனே..!
உயிரோடு உயிராயிருந்து
உறவிழந்து போனோமே...
ஒற்றைப் பாத்திர உணவினிலே
ஊட்டி மகிழ்ந்த நாளங்கே..?
நண்பனின்றி நிற்கையிலே
நானுமிங்கு நாயிங்கே...!
தாமரை இலையின் மேலாக
தடம் புரண்ட நீராக
தரை யுருண்ட நளேங்கே..
உன்னைக் காணும் நாள் தான் எங்கே..?
ஒற்றையறைப் பள்ளியிலே
அறட்டையடித்த நாற்களும்..
நாம் அமர்ந்த கதிரைகளும்
கண் கலங்கி வாடுதடா
பிரிந்து சென்ற நாளில்
வடிந்து சென்ற கண்ணீர்
இப்பவும் இனிக்குதடா...
இனிய நண்பா உன்னை நினைக்கையிலே
நட்பின் ஆழம்
நமக்குள்ளே...
பிரிவின் ஆழம்
எதற்குள்ளே...?
விரைவாக வந்துவிடு
விண்ணிலேறி விளையாட
மண்ணிலிங்கு நானொருத்தன்
மனிதனாய் உலவாட...........
நட்புடன்... பாஸ்கர்
Subscribe to:
Post Comments (Atom)
Currently have 0 comments: