Saturday, December 4, 2010

என் இனியவனே

Posted by K. Ezhil Kumar | Saturday, December 4, 2010 | Category: |

 
ஒவ்வொரு எழுத்தாய் உந்தன்
பெயரை எழுதிப் பார்க்கிறேன்
பிடித்த முதல் கவிதையாய்
தெரிவதென்ன என் காதலனே

அழகுச் சித்திரத்தின் உன் முகம்
என்றும் மறையாமல் எந்தன்
இதயத்தில் வரையப் பட்டிருக்கிறதே
இதுவென்ன என் ஓவியனே

கரை சேர துடிக்கும் அலையைப் போல
என் மனம் உனைச் சேர பாய்வதென்ன
என் பாவலனே

என்னை மறந்து நான்
தனிமையில் சிரிப்பதென்ன

தனித்துவமாய் ஏதேதோ
சிந்திப்பதென்ன

காகித பக்கங்கள் எங்கும்
கவிதை என்ற பெயரில் நான்
கிறுக்குவதென்ன என் கவிஞனே

உன் நினைவுகளில் என்னைத்
தொலைத்து உன்னைத்தேடி தினம்
தவிக்கிறேனே

இது என்ன என்
இனியவனே இதுதான்
காதலா..?

இதைத்தான் காதல்
என்பார்களா..?

உன்னைக் காதலித்ததில்
இருந்து புதிய தனி உலகத்தில்
வாழ்வதாய் உணர்கிறேன் நான்

                                      நட்புடன்...
                                      ரேவதி

Currently have 0 comments:


Leave a Reply