Saturday, December 4, 2010
நினைத்து பார்கிறேன்  நீயும் 
நானும் நடந்த இடங்களை 
நடந்து செல்கிறேன் 
அங்கு நான் மட்டும் தனியாக 
என் நிழலாய் நீ வருகிறாய் என 
நினைத்து பார்கிறேன் நீயும் 
நானும் சுற்றித்திரிந்த இடங்களை 
சுற்றுகிறேன் 
அங்கு நான் மட்டும் தனியாக 
தூரத்தில் தெரிவது நீயா என 
நினைத்து பார்கிறேன் நீயும் 
நானும் அமர்ந்து பேசிய இடங்களை 
பேசுகிறேன் 
அங்கு நான் மட்டும் தனியாக 
காற்றாக என்னோடு பேசுவாய் என 
நினைத்து பார்கிறேன் நீயும்
நானும் பேசிய வார்த்தைகளை 
நினைதுக்கொள்ள்கிறேன்
அங்கு நான் மட்டும் தனியாக 
நிஜமாக என்னோடு பேசுவாய் என 
நினைத்து பார்கிறேன் நீயும் 
நானும் பிரிந்த நிமிடங்களை 
பிரிந்து செல்கிறேன் 
அங்கும் நான் மட்டும் தனியாக 
என் இறப்பிற்க்காவது நீ வருவாய் என
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: