Saturday, November 13, 2010

சுகமான காதல் நினைவுகள்!!...... Kaathal ninaivukal

Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category: |

காதலிக்கும் போது,
என்னை நீ நினைக்கும் போது
என்னில் ஏதோ மாற்றமடா!

உன் காதல் பார்வைக்கு முன்னால்
கருகிச் சருகாகி போனதடா
என் இதயம்!

நெஞ்சக் கூட்டுக்குள் இதய
சிம்மாசனத்தில் நீ அரசனாய்
இருந்தாயடா!

செல்லும் வழியெல்லாம்
 கடிகாரத்தின் வினாடிகளில்
எல்லாம் உன் முகம் தானடா!
என்று சொன்னாயடி!

உன்னைப் பிரிந்தால் சித்தம் கலங்கி
என் மேல் பித்தம் கொண்டு உயிர் விடுவேன்
என்றாயடி!

ஆனால் இன்றோ!
ஜாதி எனும் எமன் கயிறு வீச
காதல் எனும் உயிரை பரிசாக
கொடுத்துவிட்டு வேற்றொருவன் கை
பற்றி சென்றாயடி!

இன்றும் நாம் சந்தித்த ஆற்றங்கரையோரம்
உன் பாதச் சுவடெனும் தாஜ்மகாலுக்குள்
நானே கல்லறை கட்டிக் கொண்டிருக்கிறேனடி
பல காலமாக!
என் அழியாத உன் காதல் நினைவுகளுக்கு
விஜய் கார்த்திக் 

Currently have 0 comments:


Leave a Reply