Monday, March 11, 2013
பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....
பென்சில் நுனியிலே கலைவண்ணம் கண்டார்.....
இப்படி ஆரம்பிச்சி.....
இணையத்திலிருந்து
அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.
நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.
என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.
அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.
அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.
இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..
இதுதான் அறிவின் முதிர்ச்சி.....
ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல்
மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு....
நிறைந்திருந்தாலும்
தேசம் சிறப்பாய்த்தான் இருந்தது
துரோகிகள் பிறக்கும் வரை..!
மன்னர் மணிமுடிகள்
தேசத்தை கோயிலாக்கி
அந்நிய தேசத்திடம்
அப்பாவியாய் மாட்டிக்கொண்டு
விடாப்பிடியாய் போரிட்டு
மாண்டுபோன பரிதாபம்...!!
கத்தியின்றி இரத்தமின்றி
கைக்கொண்ட சுதந்திரம்
சத்தமின்றி சுத்தமின்றி
சாகடிக்கும் நிலைமை...
"சாதிகள் இல்லையடி பாப்பா"
சான்றுரைத்த பாரதியையும்
பார்ப்பணன் என்று சொன்ன சமூகம்..!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரரையும்
காவு வாங்கிய சமூகம்...!
மாமன்னர்களும், மாவீரர்களும்
வள்ளல் பெருந்தகைகளும்
காகித ஏடுகளை காவல் செய்தனர்
காகத்திற்கும் கழுகிற்கும்
கழிப்பறையாய் நின்றனர்...!
கதிர்களெல்லாம் உதிர்ந்துபோக
பதர்கள் இங்கு பதவியில் ஏறின..
கிழக்கிந்திய நாகரீகத்தில்
இந்திய நாகரீகம் இறந்தே போனது...
கலாச்சார உடையிங்கு
கைக்குட்டையாய் சுருங்கியது
கதவுகளை சாத்திக்கொண்டு
காற்று வாங்கி களிப்படைகின்றனர்....
காளையர்களும், யுவதிகளும்
இணையம் வழியே
இச்சையை தீர்த்துக்கொண்டு
கொச்சையாய்ப் போகின்றனர்...
உணவு கொடுத்தவர்கள் வீதியிலும்
உண்டு கொழுத்தவர்கள் மாடியிலும்
புறம்போக்கு நிலமெல்லாம் புறம்போக்கிடம்
நடைமேடையெல்லாம் நலிந்தவர்களிடம்
ஒரு துளி மையை நம்பி
ஒற்றை விரலால் வாழ்வை
உள்ளூர் ஒற்றர்களுக்கே
அடமானம் வைத்த அப்பாவிகள்..!
தன்நிலை மறந்த தமிழரினமும் - இன்று
குருடாய், செவிடாய், ஊமையாய்
இவர்களின் சதையெல்லாம்
இங்கு வெறும் கதையாய்....
கதைக்குக் காரணமாவதற்கு முன்
தேசம் வளர்வதற்கு விதையாவோம்
கதிர்களாய் இருந்து விளைச்சல் தருவோம்
பதர்களை பயணத்திலேயே முறியடிப்போம்...!!
பிரியமுடன்
பிரேமி
c.premalatha59@yahoo.com>,
கண்ணதாசனின் பொன்மொழிகள்
அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே
வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல
பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில்
பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு
மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்
கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள்
இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா?
சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள்
ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது - சர்வாதிகாரம்
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம்
விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே
குழப்பம் வரவேண்டும் அதுவே சிறந்த பேச்சு
அன்பிலே நணபனை வெல்லுங்கள்
களத்திலே எதிரியை வெல்லுங்கள்
பண்பிலே சபையை வெல்லுங்கள்
மஞ்சதிலே மனைவியை வெல்லுங்கள்
மூட்டையை கொடுத்து காசு வாங்குவான் சம்சாரி
காசு கொடுத்து மூட்டையை வாங்குவான் வியாபாரி
எதையுமே கொடுக்காமால் எல்லாத்தையும்
வாங்குவான் அரசியல்வாதி
தனியாக அழுங்கள், கூட்டத்தோடு சிரியுங்கள்
கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்
தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்
உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்தான்
தூங்கும்போது மட்டும்
காதலிக்கும் போது குழந்தையாயிரு அப்போதுதான் அவள்
ஏமாற்றும் போதும் சிரித்துகொண்டே இருப்பாய்
கட்டாயம் காதல் செய்யுங்கள் - ஏனெனில்
சந்தோசம் மட்டுமே வாழ்க்கையல்ல
விதியையும் மதியால் வெல்லலாம்
என்று உன் விதியில் எழுதியிருந்தால்
யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து கொண்டே இருந்தால்
நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும்
கணேசமூர்த்தி gm124699@yahoo.co.in >
அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.
முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.
குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.
வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.
தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.
ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.
திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,
குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.
ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம்
ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம் என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.
ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
* ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
* கார் ஓட டயரும் தேயும்
* சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
* சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
* தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
* தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
* துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
* பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
* மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
* முடியுள்ள போதே சீவிக்கொள்
* பழகின செறுப்பு காலை கடிக்காது
* மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
* ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே
பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்
முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்
பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது
ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்
அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்
நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்
டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்
மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்
வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி
மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தமிழ் தாயகத்துக்காக
சாய்பாபா..
தத்துவம் 1
"காதல் பண்ணுறவனுக்கு காதலிதான் அழகு...
காதல் பண்ணாதவனுக்கு அழகானவ எல்லாம் காதலி..."
தத்துவம் 2
"காதலிக்கற பொண்ணையே கல்யாணம்
பண்ணிக்க முடியும்னு சொல்ல முடியாது..
கல்யாணம் பண்ணினவன் எல்லாம்
பொண்டாட்டியத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியாது..."
தத்துவம் 3
"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது ஜொள்ளுடா...
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதல்டா...."
தத்துவம் 4
"பொண்டாட்டிய மட்டும் காதலிக்கணும்னு
நெனைக்கறது பொம்பள புத்தி...
காதலிக்கிற எல்லாரையும் பொண்டாட்டியா
நெனைக்கறது ஆம்பளை புத்தி..."
தத்துவம் 5
"காதலிச்ச பொண்ணையே கல்யாணம் பண்ணுறவன் அதிர்ஷ்டசாலி
கல்யாணம் பண்ணுன பொண்ணையே காதலிக்கறவன் புத்திசாலி..."
தத்துவம் 6
"ஏன்னா அவ அழகுன்னு சொல்லுறவன் லோக்கல் லவ்வர்..
ஏன்னா அவ என் காதலின்னு சொல்லுறவன் True லவ்வர்..."
தத்துவம் 7
"காதலிய பொண்டாட்டி ஆக்க
முடியலைனா பொண்டாட்டிய
காதலி ஆக்கிக்குங்க...."
தத்துவம் 8
"கல்யாணத்துல காதல் முடியலாம்... ஆனா
காதல் கல்யாணத்துலதான் முடியனும்னு இல்லை..."
தத்துவம் 9
"அதிகமான பொண்ணுக பின்னாடி சுத்துனவனும்
ஒரே பொண்ணோட செட்டில் ஆனவனும்
சந்தோசமா இருந்ததா சரித்திரம் இல்லை..."
தமிழ்த் தாயகத்திற்காக
சவிதா செல்வராஜ்