Monday, March 11, 2013

ஒரு சின்ன ப்ளாஷ் பேக்

Posted by K. Ezhil Kumar | Monday, March 11, 2013 | Category: |



 

கொஞ்ச நாளாவே என் மனைவி அலுப்போடு  சொல்லிக்கொண்டிருக்கிறாள்.....
"நீங்க முன்ன மாதிரி இல்லங்க  ரொம்பவே மாறீட்டீங்க...!?"

மனைவிக்காக எவ்வளவோ விஷயங்களை விட்டுக்கொடுத்த 
நான்...இந்த புலம்பலுக்கான 
காரணம் புரியாமல் நான் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்....



ஒரு சின்ன ப்ளாஷ் பேக் 

 
சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது 

நான் சிகரெட் பிடிப்பதை அடியோடு விட்டுவிட்டேன்  



பாக்கு போடாதிங்க என்றாள்  

நான்  பாக்கு போடுவதை நிறுத்தினேன் 



என்னங்க...நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க,வேணாம் மெதுவாவே ஓட்டுங்க
 

நான்  வண்டியை மெதுவா ஓட்டுவதையே  வழக்கமாக்கினேன்.. 



உங்க தலை முடி சீராக இல்லை..குரங்கு தலை மாதிரி இருக்கு.. கொஞ்சம் சீர்படுத்துங்க.. 

உடனே முடித்திருத்துபவரிடம் போய் முடியை சீர் செய்தேன்..


ஆபிஸ் முடிஞ்சதும் பிரண்ட்ஸ் கூட அரட்டை அடிக்காம வீட்டுக்கு வாங்க சீக்கிரம்..

பல வருட பழக்கத்தை மனைவிக்காக மாற்றினேன்..


பக்கத்துவீட்டு பார்வதி வீட்டுல பெரிய டீவி வாங்கிருக்காங்க ...நமக்கும் அது மாதிரி ஒன்னு..

அடுத்த நாளே பெரிய டிவியை வாங்கி வைத்தேன்...



இப்படி..அப்படின்னு சொன்னதெல்லாம் செய்தேன்...

கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தேன்...

சில மாதங்களுக்கு பிறகு 
.
.
.
.
.
.
.

.

.

.

.

.

.

.

.
என்னங்க..... 
நீங்க முன்ன மாதிரி இல்லங்க  ரொம்பவே மாறீட்டீங்க...!? 

எனக்கு ரொம்ப போரடிக்குது..உங்க கிட்ட சண்டை போடவே முடியலை.


இந்த கொடுமைய நான் எங்க பொய் சொல்ல?
Join Only-for-tamil
ஆண்பாவம் உங்களை சும்மா விடாது பாத்துக்கோங்க..
என்  கண்ணீருக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்.


Join Only-for-tamil
உதவி:SS ராஜ்.







Join Only-for-tamil
__._,_.___

Currently have 0 comments:


Leave a Reply