Sunday, December 5, 2010
-யாசர் அரஃபாத்-
மணம் கொண்ட மழலையிலும் முகம் சுளிப்பேன்; அப்பிக்கொண்டக் கறுப்பால்; அழுது அடம்பிடிப்பேன்; அன்னையிடம்! தோல் கொண்ட நிறத்தால் துவண்டு போகும் என் தோள்கள்; வெள்ளைத் தோலைக் கண்டு கொள்ளை போகும் மனம்; பொங்கி வரும் அழுகையைப் பொத்திக் கொள்வேன் தினம்! ஆறுதல் சொல்லி அன்னை அணைத்துக் கொண்டு கதைப்பாள்; அழகுச் செல்லம் நீதான் என்று ஆணியாய் மனதில் அடிப்பாள்! தாழ்வாய் போன மனப்பான்மையால்; தயங்கித் தயங்கியே செய்வேன்; வெள்ளைக் கூட்டம் என்றாள் வெறுத்து வெளியே செல்வேன்! கட்டிப்பிடிக்கும் உறவினர்களும் கறுப்பன் என்றே சொல்லி; சிரித்துக் கொண்டே என்னைச் கிள்ளி விட்டுச் செல்வர்; அழுது அழுது புலம்பிய நாட்கள்; ஆழமாய் மனதில் புதைந்ததால்; அடுத்த கட்ட முடிவாய் எதிர்த்து நிற்கத் துணிந்தேன்! எதிர்ப்பைத் தாங்கும் சக்தி எனக்கே என்று; முழங்கினேன்; மெலோனின் என்று புரியாத பாஷையால் விளக்கினேன்! கருமை கொண்டச் சிகையும்; வண்ணம் தீட்டும் மையும்; அழகு என்றே கூவினேன்; வாய்கொடுத்து வாங்கிக் கட்டியவர்களிடம் வார்த்தை ஜாலம் காட்டினேன்! எல்லாம் செய்து அம்மா காதில் ஒதினேன்; வெண்மை கொண்ட பெண்மையைத் தேடிப்பிடிக்கச் சொன்னேன்; அதிசயமாய் பார்த்த அன்னையிடம் வெள்ளைப் பற்களைக் காட்டினேன்! -யாசர் அரஃபாத் தமிழ் தாயகத்திற்காக: முஹமது ரியாஸ் |
கண்ணே கனியமுதே என்று
இதயமாய் நீ இருக்கும் போது
தென்றல் காற்றாய்,,
சில சமயங்களில் காட்டாறாய்,,
உனக்குள் மட்டும் எப்படியடி
அதனால் தானோ என்னவோ
மட்டும் குடிபுகுந்தாள்,,
கவிதையே,,தமிழ் கவிதையே
நான் எங்கே செல்ல..
உன்னை போல் கவிதை பாட
வெறும் முற்றுபுள்ளி
என்றும் அன்புடன்
காவியக் கவிஞர் வாலி அவர்கள்
வரைந்த கவிதாஞ்சலி...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கண்ணதாசனே ! - என்
அன்பு நேசனே !
நீ தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு மூன்று தாரமிருப்பினும் - உன்
மூலாதாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள் உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால் பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கை நழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
அயல் நாட்டில் உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச் சித்தர்களுக்கும்
நீ ஒருவனே உடம்பாக இருந்தாய் !
நீ பட்டணத்தில் வாழ்ந்த பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ தந்தையாக இருந்தும்
தாய் போல் தாலாட்டுக்களைப் பாடியவன் !
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும் உன்
படப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன !
உன் மரணத்தால் ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி.
எத்தனையோ முறை இதயத்தில் அழுத்தமாய் பதிவாகியிருக்கும் இந்த வரிகள் -
கவிஞர் திலகம் வாலி அவர்களின் மனதிலிருந்து மலர்ந்த அர்ச்சனைப்பூக்கள்!! ஒரு
கவியரங்கம் அதுவும் இரங்கற் கவியரங்கில் கைத்தட்டல்கள் வரிக்கு வரி பெற்றவர்
வாலி மட்டுமே என்றால் அது மிகையில்லை. பாரதீய வித்யா பவனில் கவியரசரின் அண்ணன்
மகன் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் அவர்கள் ஏற்பாடு செய்த இரங்கற்கூட்டத்தில் கவிஞர்
வாலி மொழிந்த கவிதையிது!
G.மகேந்திரன்
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
------------------------------
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
------------------------------
வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!
பையன்: "STICK NO BILLS"
------------------------------
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.
------------------------------
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
------------------------------
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா...
வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
------------------------------
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை.
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க!
இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
------------------------------
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
------------------------------
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
------------------------------
காதலுக்கும், கல்யாணத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு.....
சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது
தம்பதிகள்.
பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்
உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்
காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.
எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.
உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்
நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்
உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.
காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரே பேசும்.
குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.
ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்.
செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.
எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.
அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.
பல மணி நேர தொலைபேசி உரையாடல்.
திருமணத்திற்குப் பின்பும் தான், அவரவர் நண்பர்களுடன்.
போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.
கண்டதும் காதலில் விழுந்தேன்;
அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், ‘பொத்’ தென காலில் விழுந்தேன்!
“தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல
அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”
“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
“தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே...
ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே...”
“சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!”
இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?
எப்படி மன்னா கண்டு பிடித்தீர்...?
போர் அபாயம்... ஓடுங்கள்’ என்று குரல் தராமல்,
கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று உளறுகிறானே...”
போர்க் களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!”
யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?”
வேண்டாம். போர்க் களத்தில் பின் வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”
மாறுவேடத்தில் மன்னர் நகர்வலம் வந்தது வேஸ்ட் ஆகிவிட்டதா?”
ஆமாம! ‘மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!’
என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!”
மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!”
“ஏன்?”
“180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!”
அரண்மனைக்குள் இருப்பதற்கு நேர் எதிராக மன்னர் வெளியில் இருக்கும்போது நடந்துகொள்வார்.”
“எப்படி?”
“அரண்மனையில் ‘யாரங்கே’ என்று அதிகாரமாக கேட்பார்.
நகர்வலம் போக வெளியே வந்தால் ‘அங்கே யாரு’ என்று பம்முவார்!”
புறமுதுகிட்டு ஓடிவரும்போது மன்னர் தனியாக
ஓடி வராமல் வீரர்களுடன் சேர்ந்தே ஓடி வருகிறாரே?”
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கடைப் பிடிக்கறாராம்!”
எப்படி சொல்வது?
காவியம் பாடும் தென்றலில்
காதலாய் காத்திருந்தேன்...
ஏங்கி மிளிரும் விழிகள்
விண்மீன்களை சுற்றிவர
இதயமோ உன் நினைவுகளோடு
உள்ளிருப்புப் போராட்டமாய்....
எப்படி சொல்வது?
என் காதலின் வீரியத்தை
உன்னில் உணர்த்த
வார்த்தைகளை தேடி
களைப்படைந்து காணாமலே...
நாவினால்
சுடும் சொற்களை வீசுகிறாய் - பின்
இதழ்களால்
மருந்திட்டு மறைக்கிறாய்...
உன்னால் மட்டுமே இப்படியெல்லாம்
என் காதல்
கலவிக்கானதல்ல என்பதை
எப்படி சொல்வது?
அன்பின் அரிச்சுவடியானவன் - சில
மணித்துளிகளில்
முற்றுப்பெற்ற சிறுகதையாய்....
அலைபாயும் நெஞ்சும்
அன்பே
உன்னோடு உறவாடத்தானே
பிரிவோடு தவிக்கிறது!
உன்னைத் தேடும் கண்களுக்கு
ஆறுதல்
உன் நினைவு மட்டுமே...
எப்படி சொல்வது?
பண்பாடு மாறாத பெண்மை இது
அன்போடு உண்மை நிலை மாறாது...
நித்ய கல்யாணியாய் நிற்பேனன்றி
பாண்டவரின் பத்தினியாக மாட்டேன்....
பிரேமலதா
மெழுகுவர்த்தியாய் ....
புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)
"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."
"எதுக்குடா செல்லம்?"
"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"
விவசாயம் பண்ணறது தப்பா சார்?"
"தப்பில்லை. ஏன் கேட்கிறே?"
"நாங்க கடலை போட்டா மட்டும் திட்டுறீங்களே!"
ஏண்டா.. கோயில்ல சிலையைத் திருடினே?"
"திருடல ஐயா.. கோயில்ல கூட்டமா இருக்கேன்னு வீட்டுக்கு கொண்டு போனேன்.. இது தப்பா?"
எல்லா ஒட்டப்பந்தயதுல நீங்க ஜெயிச்சிடுகிறிகளே, எப்படி?
என்னை கடன்காரங்க துரத்துறதாநெனைச்சுப்பேன், அப்புறம் வெற்றிதான்.
ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?
சமையல் கட்டுல வேலை செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.
சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் '
மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.
மன்னர்: கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
அமைச்சர் :இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்களாம்
மன்னா அண்டை நாட்டு மன்னன் காக்கா மூலம் தூது அனுப்பியதன் மூலம் ஒரு விஷயம் புரிகிறது.
என்ன?
இதற்கு முன் தூது வந்த புறாக்களையெல்லாம் நீங்கள் ரோஸ்ட் செய்து சாப்பிட்டது அவனுக்குத் தெரிந்து விட்டது.
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஒண்ணுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில்
மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான்.
ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா: ???????
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார்.
அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது.
ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.
முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.
அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார்.
விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..
"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நெப்போலியன் :- என்னுடைய அகராதியில்
முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம்,
வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்
தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
நட்புடன்
பொறிஞர் வி.நடராஜன்
எனக்குள் மலரும் கற்பனைகளை
கண்திறந்து கவிதையாக வடிக்கிறேன்.
ஒவ்வொரு வார்த்தைகளையும்
தேடித்தேடி கோர்வையாக்குகிறேன்
அனைத்திலும் உன் பெயர் தான் வடிவமைகிறது.
நிசப்தமான நேரங்களில் ஏனோ
உன் பெயரை உரக்கக் கூற சொல்கிறது என் மனம்.
ஆனால் மௌனத்தை காயப்படுத்தாமல்
உதட்டுக்குள்ளே முணுமுணுக்கிறேன்.
தனிமையிலும் இனிமையாக உன்
பெயரை சத்தமின்றி பாடலாக துதிக்கிறேன்.
ஒரு வார்த்தை அடங்கிய உன் பெயரை
இடைவெளியில்லாமல் உச்சரிக்கிறேன் அவை யாவும்
நெஞ்சமெல்லாம் நிறைந்த நிமிஷங்களாக இனிக்கின்றன.
ஸ்ரீமாரியா.
கடல் கடக்கக் கடவுச்சீட்டு
கரம் வந்ததும்; மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்த குடும்ப உறவுகள்!
கரிசனத்தோடு நலம் விசாரிக்கும்
ஊர்வாசிகள் விசா வந்ததா என்று!
சிறு மூட்டைகளைக் கையில்
ஒளித்துக் கொண்டு
உறவுகளுக்கு அங்கே சேர்க்க
எண்ணங்கொண்டு!
பட்டியல் போட்டுக்
காதைக் குடையும் வாண்டுகள்
அது வேண்டும் இது வேண்டும் என்று!
பலகாரங்கள் பையை நிரப்ப
துணிமணிகள் ஒதுங்கிக்கொள்ள;
வியர்த்த கைகளில் கடவுச்சீட்டும்;
விமானச்சீட்டும்!
கட்டிப்பிடித்துக் கண்கள் அழ;
கூடவே மூக்கும் சேர்ந்துக்கொண்டு!
கனமான இதயத்துடன் காருக்குள் நான்;
முத்தத்தால் எச்சில் பட்ட நெற்றியுடன்;
ஏறி இறங்கும் மூச்சுடன்;
பணம் விளையும் பாலைக்குப் பயணம்!
சராசரி இந்தியக் குடிமகன்..
ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்டு;
வறுமைக்குத் தோள்கொடுத்துத்
துவண்டு போய்;
வாக்காளனாக மட்டுமே;
வளரும் இந்தியாவின்
வாரிசுகள் நாங்கள்!
கட்டுக் கட்டாய் பணத்தோடு
குளியல் போடும் களவாணிகள்
எங்கள் அரசியல்வாதிகள்!
சிரிப்பு ரேகைகள் எங்கள் முகத்தில் தெரிய;
அடிக்கடி வரும் தேர்தல்கள்!
ஓட்டுக்கு மட்டும் கைகூப்பி;
முகம் திறந்த கொள்ளையர்கள்!
விரலுக்கு மை பூசி முகத்தில் கரி
பூசியதற்குப் பிறகு மறந்து போகும்
எங்களின் நினைவுகள்!
ஓட்டெடுப்பிற்கு மட்டும்
பயன்படும் இன்னொரு
இயந்திரம் - சராசரி
இந்தியக் குடிமகன்!
ஜலதோஷம்...
கிட்ட வரும் சொந்தங்களையும்
எட்டிப்போகச் செய்யும்;
உறங்கிக்கொண்டிருக்கும்
அமைதியையும் அரக்கத்தனமாய் கொல்லும்...
உதடு இரண்டும் முட்டி முட்டி
மூச்சுத் திணறும் முத்தம்;
கைக்குட்டையில் ஒளிந்து கொள்ளும்
தும்முகின்ற சப்தம்!
அடைபட்டுப் போன மூக்கால்;
தடைபட்டுப் போகும் சுவாசம்;
தோற்றுப்போன மோப்பத்தால்;
தோல்வி காணும் வாசம்!
கோர்த்துக் கொண்ட நீரால்;
தலைக்குக் கனம் ஏறும்;
ஏறிப்போன கனத்தால்
மாறிப்போகும் முகம்!
தும்மிக் கொண்டே இருப்பதால்
கம்மிப் போகும் குரல்;
தூறல் போடும் வாசலால்
ஈரமாகும் விரல்!
-யாசர் அரஃபாத்
உன் விரல் பிடித்து நடக்க வேண்டும்!
இரண்டு வயது குழந்தையாக!
எப்போதும் உன்னிடம்
பேசிக்கொண்டிருக்க பிடிக்கும்...
அதை விட அதிகம் பிடிக்கும் பேசாமல்
உன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது...!
நீ ரயிலுக்காக காத்திருக்கிறாய்
வந்து விட வேண்டுமென்று...
நான் பிரிவிற்காக காத்திருக்கிறேன்
வந்து விடக் கூடாதுஎன்று
என் இறக்கும் தருணம் உன் மடியில்
இருக்கும் தருணமாய் வரம் கொடு
உன் தோள் சாயும் உரிமையை
விட்டுத்தருகிறேன்...
நட்புடன்...
ரேவதி
விழி தேடும் வேளையில்,
மின்னலாய் வருகிறாய் ,
தேடியலைகிறேன்
என் காதலின் தடங்களை......
நீ விட்டுச் சென்ற மீதி உயிர்
கரைந்தோடுகின்றது,
நொடிகளை விட அசுர வேகமாய்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதல் வேண்டாம் அன்பே .....
உன் உடைக்க முடியா பதிலில்
தோற்றுப்போய்,
இது நட்பு என்றே
ஒத்துக்கொள்கிறேன்.
மீண்டும் வா!
நொறுங்கிப் போன என் கனவுகளையும்,
மீதமிருந்தால், இதயத்தையும்
ஒட்டிப்பார்த்து உயிர்க்கொடுக்க
முயற்சி செய்யலாம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவன் வரப்போவதில்லை,
இறுதிவரை வரப்போவதில்லை
என்று இதயம் நொடிக்கொருமுறை
ஞாபகப்படுத்தியும்,
அவன் வராத வழியை நோக்கியே
காத்திருக்கின்றன தூக்கமிழந்த
என் ஈர விழிகள்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் ஏன் இப்படி ??
எதற்காக காதல் வலிகளைப் பற்றியே
கவிதை எழுதிக் கொண்டிருக்கின்றேன் ??
அவன் வருவதற்கு முன்பிருந்தே
இவ்வுலகை ரசித்தேனே ???
பிறகேன் இப்படி ??...
என் உலகம் இருட்டாக்கப்பட்டாலும்,
அவன் நினைவுகள் என்னை கவிதை எழுத தூண்டுகின்றனவா ???
உனக்கு மாற்றம் வேண்டும்....
அவன் கொடுத்து விட்டுப்போன வலிகளை
மறக்கத் துவங்கு....
தொலைத்துவிட்ட வழியைத் தேடு ....
ஆயிரமாயிரம் உறுதிகள் எனக்கு நானே
கூறிக் கொண்டே தனிமையில்
தோட்டங்களில் உலவிச்சென்றேன்,
அவன் நினைவுகள் தூரமாயின.
சில பூக்களும் என்னை வாழ்த்த விழைந்தன
தற்செயலாய் அவர்களை கடந்தபோது கவனித்தேன்,
என் வலிகளை உணர்த்த ,
கைகள் எங்கும் முட்களை ஏந்திக்கொண்டிருந்தனர்,
அவன் நினைவுகளை விட்டுப் பயணிக்க முயன்ற
என்னைப் பற்றி, ஏளனமாய்,
ஒன்றோடொன்று முகம் உரசி,
ரகசியம் பேசிக்கொண்டிருந்தன,
எனக்காக அவன் ,
என்றோ பரிசளித்த ரோஜாச் செடிகள் ...........
நட்புடன் ...
ரேவதி
அம்மா,
அணுவைச் சிதைத்து
ஏழ்கடலைப் புகட்டிப்
பொதுவாய் நின்ற
ஓர் இன்பக்கொள்கை!
அம்மா...!
உலக வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட ஓர் உண்மை
உயிர்பெற்று உலவுகிறது
இவ்வுலகில்...!
அம்மா என்ற மூன்றெழுத்து ,
மனம் என்ற மூன்றில் பிறந்து,
உயிர் என்ற மூன்றில் கலந்து,
தாய்மை என்ற மூன்றில்
முடிசூடிக்கொள்கிறது,
இவ்வுலக உறவுகளிடம்...!
ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
அம்மா...!
ஆண்டாண்டு அழுதுபுரன்டினும்
ஆண்களுக்குக் கிட்டாத ஓர்
அரிய உணர்வு,
தாய்மை...!
அன்பின் அடையாளம் கண்ணில் புணரும்!
கண்ணையும் குருடாக்கி என் அன்பை புண்படுத்த
புறப்பட்டு வந்தாய்!
அன்புக்கு அர்த்தம் தெரியாத உன்னிடத்தில்
அன்பை யாசித்து நின்ற என்னையே
அர்த்தம் தெரியாதவனாக்கி விட்டாயே!
உன் தாயைவிட ஒரு படி மேலானவன் ...
உன்னை என் இதயக் கருவில் சுமப்பதால்!
Saturday, December 4, 2010
என் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து
எத்தனை சொந்தம் என் வாழ்வில்
வந்தாலும் அம்மா
உன் ஒற்றை பார்வையின் பந்தம்
எதுவும் தந்ததில்லை
உன் கண்ணீரை எல்லாம் சிரிப்
மறைத்தாய் அம்மா
இத்தனைநாளும் அது எனக்கு
விளங்கியதில்லை
நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல
உன் ஆயுள் காலம் வரை
உன் காலம் நரைக்கும் நேரத்தி
என் நேரம் உனக்காய்
இருக்க போவதில்லை
தெரிந்தும்
காக்கிறாய் உன்
இமைக்குள் வைத்து என்னை
கடமைக்காக அல்ல
கடனுக்காக அல்ல
கடவுளாக
உன் வாழ்வின் ஒரு பாதி
உன் பெற்றோருக்காய்
மறு பாதி உன் பிள்ளைகளுக்கா
மனதார பகிர்ந்தளித்து விட்டாய
என்றாவது உனக்காய் வாழும்
உத்தேசம் உண்டா
உன் அன்னைக்கு என்ன கைமாறு
செய்தாலும் உன்னை எனக்கு
தந்ததிற்கு ஈடாய்
ஒன்றும் செய்ய இல்லாமல்
முடமாய் நிற்கிறேன்
ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை
இனி ஒரு ஜென்மம்
இருந்து உயிரினமாய் பிறந்தால்
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்
மட்டும் போதும்
ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம்
இன்று மட்டுமாவது
உனக்காய் வாழ முயற்சி செய்
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்
பெற்றவர்கள், உடன் பிறந்தவர்கள்,
புது மனைவி, அரட்டை அடித்த நண்பர்கள்
காலாற நடந்து திரிந்த கிராமம்...
எல்லாம் விட்டுப் பிரிந்தோம் - எம்மை
எதிர்பார்த்து நிற்கும் குடும்பத்தைக்
கரையேற்றுவதற்கு...
சொர்க்க சுகத்தைத் தரும் சொந்தங்களை
சோர்வுறாமல் காப்பதற்கு
தோள் கொடுத்தது வெளிநாடு தான்...
இன்று நரகத்தில் இருந்தாலும்,
இறுதிவரை சொர்க்கத்தில்
இருப்பதற்கு ஆசையுண்டு.
இதனாலேயே இன்று இங்கு
இடி தாங்கிகளாகி விட்டோம்.
பிரிவு என்பது கொடுமை தான் - ஆனால்
இதயங்களினால் சேர்ந்தே இருக்கிறோம்
இனிய நினைவுகளினால் பிரிவுத் துயரை
பின் தள்ளிவிடுகின்றோம்.
வாய்ப்புகள் வருவது அபூர்வம்...
வரும் வாய்ப்பைத் தவிர்ப்பது அறிவீனம்...
வாழ்வே எதிர்நீச்சல் தானே...
எதிர்காலத்தில் வரப் போகும் சூரிய ஒளிக்காக...
இன்று நாம் மெழுகுவர்த்திகளாகி இருக்கின்றோம்...
இது கூட இன்பம் தான்...
எம் இனிய குடும்பமே! கலங்காதீர்கள்...
இன்றும் என்றும் இருப்போம் உங்கள் நினைவுகளுடன்...
இணைந்து விடுவோம் உங்களுடன் வெகு விரைவில்....
அதுவரை...
ஆறுதல் உங்களது அன்பு ஒன்று தான் எமக்கு!
நாடு விட்டு வாழும் நண்பர்களின் சார்பில்,
அபிராமி
பெயரை எழுதிப் பார்க்கிறேன்
பிடித்த முதல் கவிதையாய்
தெரிவதென்ன என் காதலனே
அழகுச் சித்திரத்தின் உன் முகம்
என்றும் மறையாமல் எந்தன்
இதயத்தில் வரையப் பட்டிருக்கிறதே
இதுவென்ன என் ஓவியனே
கரை சேர துடிக்கும் அலையைப் போல
என் மனம் உனைச் சேர பாய்வதென்ன
என் பாவலனே
என்னை மறந்து நான்
தனிமையில் சிரிப்பதென்ன
தனித்துவமாய் ஏதேதோ
சிந்திப்பதென்ன
காகித பக்கங்கள் எங்கும்
கவிதை என்ற பெயரில் நான்
கிறுக்குவதென்ன என் கவிஞனே
உன் நினைவுகளில் என்னைத்
தொலைத்து உன்னைத்தேடி தினம்
தவிக்கிறேனே
இது என்ன என்
இனியவனே இதுதான்
காதலா..?
இதைத்தான் காதல்
என்பார்களா..?
உன்னைக் காதலித்ததில்
இருந்து புதிய தனி உலகத்தில்
வாழ்வதாய் உணர்கிறேன் நான்
நட்புடன்...
ரேவதி
நிலவின்
ஒளியில் பேசி
களித்திருந்த நாட்கள்
பல - இன்றோ
பௌர்ணமி நிலவும்
ஒளி வீசவில்லை - நீ
இன்றி ஒளி வீச
நிலவு கூட மறுக்கிறது !!!
காத்திரு வருவேன்
சில நாளில் என்றாய் - காத்திருக்கிறேன்
இன்றும்
உனை எதிர்பார்த்து !!!!
***************************
***************************
கொல்லும் என
எண்ணினேன் - உணர்ந்தேன்
இன்று வார்த்தைகளை
மௌனம் மிஞ்சும் என்று !!!
மௌனமே எனைக்
கொல்லும் ஆயுதமோ - பேசிவிடு
என்னிடம் நான்
இறக்கும் முன் !!!!
இனியவன் இனியா
உலகை காண்பதற்கு அல்ல
உன் அழகை காண்பதற்கு....
ஒருமுறை வளர்ந்தேன்
இளமை காலத்திற்கு அல்ல
உன் வருகை காலத்திற்கு....
ஒருமுறை தவித்தேன்
இசையை கேட்பதற்காக அல்ல
உன் குரலை கேட்பதற்காக....
பலமுறை துடித்தது
என் இதயம்
உயிர் வாழ்வதற்காக அல்ல
உன்னோடு வாழ்வதற்கு...
காதலே உன்னை வலை
போட்டு தேடியதில்லை…
சுவாச காற்றிலும் உன்
பெயர் சொல்லியதில்லை…
உணர்வில் கூட காதல்
எண்ணம் இருந்ததில்லை…
காதல் கொள்ள இதுவரை
ஆசை மனதில் வந்ததில்லை!
~~~~
புதுசாக பூத்த காதல் – அதிசயமாய்
என்னை மாற்றிய போதும் – மனதிலே
கோலங்கள் அழியாமல் உன் முகம்
அதிலே தெரியுதடா!
~~~~
புதியதாக என் மனதில் நீ பிறந்தாய்
அன்று காதல் பூவை என்னில் மலரவைத்து
எண்ணங்கள் அத்தனையும் உனக்காக மாற்றிவிட்டு
உன் காதலியாய் என்னை உருமாற்றி செல்கிறாய்!
~~~~
இதமான மலர்க்கூட்டம் இணையக் கேட்டேன்
வெட்கத்தில் என் முகம் சிவக்க கேட்டேன்
வீசும் காற்றில் அவன் சுவாசம்
என்னை தழுவி செல்ல வேண்டும்
இதயங்கள் இரண்டும் இணையத்தான்
எண்ணங்கள் ஒவ்வொன்றும்
ஒன்றாக வேண்டும் என்றேன்!
~~~~
இதயத் துடிப்பும் இன்று – காதல்
துடிப்பாய் மாறத்தான் – காதலன்
உன் பெயரை இதயம்
மறக்காமல் சொல்லுதடா!
~~~~
தனிமையில் தவிக்க வைக்கும் காதல்
மனதை சிறையில் அடைத்து விட்டு
தனித்துவமாய் என்னை சிந்திக்க வைக்குதடா.!
~~~~
நட்சத்திரம் பூத்திருந்தாலும்
நிலாவிற்கே மதிப்பதிகம் – எத்தனை
உறவுகள் என் எதிரில் வந்தாலும்
காதலன் உனக்கே அன்பதிகம்.!
~~~~
ஒளி தரும் நிலவு
பக்கத்தில் இல்லை என்று
கவலைப்பட்டால் கிடைப்பதில்லை
காதலன் நீ இல்லை என்று
மனம் வருந்தினால் போதும்
மனதிலே நினைவாகவோ
நேரிலே நிஜமாகவோ
என் எதிரே வருகிறாய்!
~~~~
எத்தனை உறவுகள் எனக்கிருந்தும்
இன்று உயிர் தேடும் உறவாக
உன்னைத் தேடுகிறேன்!
~~~~
நட்புடன்...
ரேவதி