Sunday, December 5, 2010
எப்படி சொல்வது?
காவியம் பாடும் தென்றலில்
காதலாய் காத்திருந்தேன்...
ஏங்கி மிளிரும் விழிகள்
விண்மீன்களை சுற்றிவர
இதயமோ உன் நினைவுகளோடு
உள்ளிருப்புப் போராட்டமாய்....
எப்படி சொல்வது?
என் காதலின் வீரியத்தை
உன்னில் உணர்த்த
வார்த்தைகளை தேடி
களைப்படைந்து காணாமலே...
நாவினால்
சுடும் சொற்களை வீசுகிறாய் - பின்
இதழ்களால்
மருந்திட்டு மறைக்கிறாய்...
உன்னால் மட்டுமே இப்படியெல்லாம்
என் காதல்
கலவிக்கானதல்ல என்பதை
எப்படி சொல்வது?
அன்பின் அரிச்சுவடியானவன் - சில
மணித்துளிகளில்
முற்றுப்பெற்ற சிறுகதையாய்....
அலைபாயும் நெஞ்சும்
அன்பே
உன்னோடு உறவாடத்தானே
பிரிவோடு தவிக்கிறது!
உன்னைத் தேடும் கண்களுக்கு
ஆறுதல்
உன் நினைவு மட்டுமே...
எப்படி சொல்வது?
பண்பாடு மாறாத பெண்மை இது
அன்போடு உண்மை நிலை மாறாது...
நித்ய கல்யாணியாய் நிற்பேனன்றி
பாண்டவரின் பத்தினியாக மாட்டேன்....
பிரேமலதா
Currently have 0 comments: