Sunday, December 5, 2010
நீ பிரிந்து சென்றபின்
உன் நினைவுகளை எப்படி
செலவழிக்க ....
காகிதங்களில்
கவிதையாகவா...
 கண்களில்
 கண்ணீராகவா ...
தொண்டைக்குழி அடைக்கும்
உன் நினைவுகளை
எந்த நீர் கொண்டு விழுங்குவது
விடை கேட்டு வருகிறது
என் கண்ணீர்.....
உணர்வுகளுக்கு சாவி போட்டு பறக்க விடு,
 உள்ளத்தை ஒருமுறையேனும் திறந்து விடு,
உருவம் இல்லாத என் அன்புக்கு,
 உன் உயிர் உள்ள சொற்களே
உயிர் தரும்.
காயம் மாறினாலும்
காயத்திற்கு வந்த
காரணம் மாறாது.
 என் நினைவுத் திரியில் நீ...
உருகுகிறேன் நான்
மெழுகுவர்த்தியாய் ....
மெழுகுவர்த்தியாய் ....
                                                நட்புடன்...
                                                                   ரேவதி
Subscribe to:
Post Comments (Atom)
 
 
Currently have 0 comments: