Sunday, December 5, 2010

சராசரி...

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: |

 

மணம் கொண்ட மழலையிலும்
முகம் சுளிப்பேன்;
அப்பிக்கொண்டக் கறுப்பால்;
அழுது அடம்பிடிப்பேன்;
அன்னையிடம்!

தோல் கொண்ட நிறத்தால்
துவண்டு போகும் என் தோள்கள்;
வெள்ளைத் தோலைக் கண்டு
கொள்ளை போகும் மனம்;

பொங்கி வரும் அழுகையைப்
பொத்திக் கொள்வேன் தினம்!

ஆறுதல் சொல்லி அன்னை
அணைத்துக் கொண்டு கதைப்பாள்;
அழகுச் செல்லம் நீதான் என்று
ஆணியாய் மனதில் அடிப்பாள்!

தாழ்வாய் போன மனப்பான்மையால்;
தயங்கித் தயங்கியே செய்வேன்;
வெள்ளைக் கூட்டம் என்றாள்
வெறுத்து வெளியே செல்வேன்!

கட்டிப்பிடிக்கும் உறவினர்களும்
கறுப்பன் என்றே சொல்லி;
சிரித்துக் கொண்டே என்னைச்
கிள்ளி விட்டுச் செல்வர்;

அழுது அழுது புலம்பிய நாட்கள்;
ஆழமாய் மனதில் புதைந்ததால்;
அடுத்த கட்ட முடிவாய்

எதிர்த்து நிற்கத் துணிந்தேன்!
எதிர்ப்பைத் தாங்கும் சக்தி எனக்கே என்று;
முழங்கினேன்;
மெலோனின் என்று
புரியாத பாஷையால் விளக்கினேன்!

கருமை கொண்டச் சிகையும்;
வண்ணம் தீட்டும் மையும்;
அழகு என்றே கூவினேன்;
வாய்கொடுத்து வாங்கிக் கட்டியவர்களிடம்
வார்த்தை ஜாலம் காட்டினேன்!

எல்லாம் செய்து
அம்மா காதில் ஒதினேன்;
வெண்மை கொண்ட பெண்மையைத்
தேடிப்பிடிக்கச் சொன்னேன்;

அதிசயமாய் பார்த்த அன்னையிடம்
வெள்ளைப் பற்களைக் காட்டினேன்!

-யாசர் அரஃபாத்

தமிழ் தாயகத்திற்காக: முஹமது ரியாஸ்

__._,_.___

Currently have 0 comments:


Leave a Reply