Saturday, November 13, 2010
சிந்தனை துளிகள்... sinthanai thulikal
 Posted by K. Ezhil Kumar | Saturday, November 13, 2010 | Category:  
        
கவிதைகள்
      
 |    
 
 நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
 சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
 ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகி
ஒரு நாளைக்கு ஒரு வேளை உண்பவன் யோகிஒரு நாளைக்கு இரு வேளை உண்பவன் போகி (போஜன பிரியன்)
ஒரு நாளைக்கு மூவேளை உண்பவன் ரோகி (நோயாளி)
ஒரு நாளைக்கு நாவேளை உண்பவன் துரோகி
 வள்ளலுக்கு பொன் துரும்பு.
வள்ளலுக்கு பொன் துரும்பு.சூரனுக்கு சேர்ந்த மரணம் துரும்பு.
அறிவோர்க்கு பெண் துரும்பு.
துறவோர்க்கு வேந்தன் துரும்பு
 எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
 ஒரே குறிக்கோள்
ஒரே குறிக்கோள்எல்லையற்ற ஊக்கம்
தளர்வில்லாத நெஞ்சுறுதி
சளைக்காத உழைப்பு
நேர்மையான பாதை -வெற்றி
கிடைக்காமலா போய்விடும்?
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.
இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.
 ஏதாவது செய் ஏதாவது செய்
ஏதாவது செய் ஏதாவது செய்சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.

உலகத்திலே வந்து இருக்கிறது கொஞ்சகாலம்.
ஈசல் மழைக்கு வந்து மடியறாப்பல.
அந்தப் பொழுதை அடிச்சுக் கோச்சுக் கிட்டுப் போக்கனுமா?
அடிச்சு யாரைத் திருத்த முடியும்?
-முள்முடியில் தி.ஜானகிராமன்

நேற்றைய பொழுதும் நிஜமில்லை
நாளைய பொழுதும் நிச்சயமில்லை
இன்றைக்கு மட்டுமே நம் கையில்
 ”காலம்....!! விலைக்குக் கிட்டாது!
”காலம்....!! விலைக்குக் கிட்டாது!விரும்பியும் திரும்பாது!
 ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோஅதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்
 ”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
”தூய்மை, பொறுமை, விடாமுயற்சிஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"
-விவேகானந்தர்
 வாழ்க்கை என்பது
வாழ்க்கை என்பதுஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
 சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்காதவன் முட்டாள்சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்
 ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
Subscribe to:
Post Comments (Atom)
 
 
very good
please
very nice...
nice line
super
Super
Super!
nice! please visit my blog : https://tamilsinthanai.blogspot.in/
Nice
super
Nice line
Nice
அருமை