Wednesday, September 4, 2013

ஆளாக்கிய அன்னை!

Posted by K. Ezhil Kumar | Wednesday, September 4, 2013 | Category: | 0 comments


தாமஸ்
 ஆல்வா எடிசனை அவரது பள்ளிஆசிரியர் எதற்கும் 
தகுதியற்றவர்  என்று கூறிவிட்டார்.
டாக்டர்கள் எடிசனை சோதனை செய்து பார்த்துவிட்டு எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறாக அமைந்திருக்கிறது எனவே இவர் விரைவில் பைத்தியமாகிவிடுவார் என்று கூறினார்கள்.
 
ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனைப் பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்குப் பாடம் கற்பித்தார்.
  
அந்தத் தாயாரின் விடாமுயற்சியாலும்,உழைப்பாலும் எடிசன் உயர்வு பெற்றார். தாயின் கனவும் பலித்தது.அந்த எடிசனே பின்னாளில் எல்லோராலும் பாராட்டப்பட்ட பெரிய விஞ்ஞானி ஆனார்.
 
"மனிதன் கடன் பட்டிருப்பது மூளைக்கல்ல;முயற்சிக்கே,
கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார், மனிதர்களின் முயற்சியே அவற்றின் விலை என்னும் அற்புத வாக்கை  
கூறியவரும் தாமஸ் அல்வா எடிசன் தான்.
 
அன்புடன்,
ஸ்ரீமாரியா.

அம்மாவை நேசியுங்கள்..

Posted by K. Ezhil Kumar | | Category: | 1 comments



திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் என் மனைவி கூறினாள்.

“ எனக்கு தெரிந்த ஒரு பெண் உங்களோடு ஒரு நாள் பொழுதைக் கழிக்க வேண்டுமென்று விரும்புகிறாள். அந்தப் பெண் என்னை விட உங்களை அதிகமாக நேசிக்கிறாள்”

இவ்வாறு என் மனைவி குறிப்பிட்ட அந்த பெண் 19 வருடமாக விதவையாக இருக்கும் என்னுடைய தாயார்தான். நான் என் 3 குழந்தைகளுக்காக அதிகம் வேலை பார்க்க வேண்டி இருந்ததால் சில நாட்களாக அவளை சரியாக கவனிக்க முடியவில்லை.

அன்று மாலை நான் அவளை வெளியில் எங்காவது கூட்டிப்போகலாம் என்று நினைத்து போனில் கூப்பிட்டேன்.

“என்னாச்சு? உனக்கு ஒன்றுமில்லையே?” என்று வழக்கமாக போனை எடுத்தவுடன் கேட்கும் கேள்விகளையே அன்றும் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நாம் இன்று மாலை எங்காவது வெளியில் போகலாமா?”

“நான் இதைத்தான் எதிர்பார்த்தேன்” ஒரு நிமிட யோசனைக்கு பின் அவள் கூறினாள்.

அன்று மாலை அலுவலகம் முடிந்ததும் நான் நேராக அவள் வீட்டுக்கு போனேன். எனக்கு கொஞ்சம் படபடப்பு. என்னுடைய கார் அவளது வீட்டுக்கு போகுமுன்பே அவள் ரெடியாக இருந்தாள். சுற்றுலா செல்லும் ஒரு குழந்தையை போல அவளுக்குள் ஒரு இனம் காணாத சந்தோஷம். குளிருக்கு கம்பளியை எடுத்து போர்த்தி இருந்தாள். தலைமுடியை சுருள் சுருளாக செய்து கடந்த என்னுடைய திருமணத்தின் போது வாங்கிய உடையை அணிந்து இருந்தாள்.

“என்னுடைய மகன் இன்று என்னை வெள்யில் கூட்டிச் செல்வதாக கூறி இருக்கிறான்” என்று தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் கூறி விட்டதாக என்னுடைய காரில் ஏறிக்கொண்டே கூறினாள்.

அந்த உணவகம் ஒன்றும் ஆடம்பரமானதாக இல்லை. ஆனால் நன்றாக இருந்தது. அன்னை மட்டுமே முதலும் கடைசியுமாக காதலிக்கும் ஒரு பெண்ணைப்போல் எனது கைகளை அவள் பிடித்துக் கொண்டாள். நாங்கள் மேஜையில் உட்கார்ந்த பின் அவளே வரவழைக்கட்டும் என்று எண்ணி உணவுப்பட்டியலை எடுத்து அவளிடம் படிக்க கொடுத்தேன்.

நீ குழந்தையாக இருக்கும் போது நான் உனக்காக முழுப்பட்டியலையும் வாசித்துக் காட்டினேன்” அவள் கூறினாள்.

இப்போது அவளுடைய எதிர்பார்ப்பு எனக்கு நன்றாக புரிந்தது.

சாப்பிடும் போது அவள் எங்களுடைய அப்போதைய குடும்ப விசயங்களைப் பற்றி மிகவும் சிலாகித்து பேசினாள். அதனால் அடுத்து சினிமாவுக்கு செல்ல கொஞ்சம் நேரமாகிவிட்டது. ஆனாலும் போய்விட்டோம்.

நான் அவளை வீட்டில் கொண்டுபோய் விடும்போது அவள் கூறினாள்.

“ இன்னும் ஒரு நாள் இப்படி பொழுதை கழிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், ஆனால் அந்த முறை நானே உன்னை அழைப்பேன்”

நான் சரியென்று தலையாட்டினேன்.

வீட்டுக்குப் போனதும் மனைவி கேட்டாள்.

“இன்றைய பொழுது எப்படி கழிந்தது?

“நினைத்ததை விட நன்றாகவே கழிந்தது.” நான் கூறினேன்.

சில நாட்களில் மிகப்பெரிய மாரடைப்பு வந்து அவள் இறந்து விட்டாள். என்னால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நான் அவளுடன் சாப்பிட்ட உணவகத்திலிருந்து எனக்கு ஒரு ரசீது கடிதத்துடன் கவரில் வந்தது. அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டு இருந்தது.

“நம்முடைய இரண்டாவது நாள் சாப்பாட்டுக்கும், சினிமாவுக்கும் நானே பணம் செலுத்தி விட்டேன். ஒருவேளை அந்த நாள் நான் இந்த உலகில் இல்லாது போய் விடலாம். அதனால் நான் உனக்கும் உன் மனைவிக்குமாக சேர்த்து இரண்டு பேருக்கு பணம் செலுத்தி இருக்கிறேன். நீ என்னை வெளியே கூட்டிச் சென்ற அந்த நாளில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் அன்பு மகனே நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன்.”

(  இணையத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது )
 
இப்படிக்கு
அ.கணேஷ்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments






2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.        

இணையத்திலிருந்து 

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


இதயத்தை பாதுகாக்க யோசனைகள்:


1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள்.சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும்.சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு -சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும்.குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம்.அவற்றை குறைவாக,அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால்,மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுங்கள்.ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் -பழங்கள் 50முதல் 60 %வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி,வெங்காயம்,பூண்டு,எலுமிச்சை,கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய ,உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %)நமக்கு மனச்சுமை (Stress)வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect )இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள்.நீங்கள் perfectஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள்.இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம்,வருத்தம்,மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள்.அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.


17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.வேலையை விட்டு செல்பவர்களை விட,அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார்!

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி,கணினி,வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்;அது மோசமான பழக்கம்;மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும்,பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy)புற்று நோய்,இதய நோய்,மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள்.நல்லதே நடக்கும் என ( Optimist )நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்-மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு.தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள்.புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள்.நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.


இணையத்திலிருந்து
Dr.தமிழ்

__._,_.___

சந்தித்து விட்டேன்.. என் மரணத்தை...!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments

எல்லாவற்றிலும்.. உன்னோடு எல்லாவற்றிலும்..
உன் பாதம் பின்பற்றி வரவே..
படைக்கப்பட்டதாய்.. உணர்ந்தேன்...
நீ என்னுள் நுழைந்த கணத்தில்...!

உன் வெயிலுக்கு
என் அன்பே நிழலாக...

என் வெய்யிலுக்கு
உன் நிழலே குடையாக..

என் நெஞ்சில் உன்னை தாங்கி...
என் பிள்ளையாய் அணைத்துக்கொள்ள...

உன் மார்பில் என்னை கிடத்தி
உன் குழந்தையாய் உன்னுள்
பிணைத்துகொள்ள

உன் கரம் பற்றி...
எல்லாமும் உனக்கே அர்ப்பணித்து
வாழ அத்தனை ஆசைகள்...
அத்தனை ஏக்கங்கள்..
நிறைத்திருந்தேன்.. நெஞ்சில்...

கடலில் கலக்க வந்த தூசியை
கரையில் தூக்கி வந்து வீசும்
ஒரு அலையை போலே..

என் நேசத்தை
நீ தூக்கி வீசி போன கணத்தில்
உயிரோடு சந்தித்து விட்டேன்..
என் மரணத்தை...!
நட்புடன்
Join Only-for-tamil
ஸ்ரீ வசந்தா

நான் எழுதும் கவிதை உனக்கு புரியாது!!!!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


நான் எழுதும் கவிதை நிச்சயம்
உனக்கு புரியாது..

என் மனக்கண்ணாடியை நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..

என் மனக்காட்சிகள் எனக்கே சரியாக தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?எனது கவிதை புரியுமா?

உனக்கு என் கவிதை புரியாததால்
நான் வருத்தப்பட முடியாது...

என் வருத்தங்களை கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..

என் சிந்தையில் சிந்தியவைகளை,எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து,உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூலாய் தூவுகிறேன்..

அந்த தூறலில்நனைவது
உனக்கு பிடிக்கவில்லை என்பதால்
எனது கவிதை தூறல் நின்று விடாது..

என்ன செய்வது,
உடையும் நிலையில் இருக்கும்
அணையின் மீது பெய்யும்
கார்கால மேகமாக
சில நேரம்
எனது கவிதை...


மீண்டும் சொல்கிறேன் நான் எழுதும் கவிதை
நிச்சயம் உனக்கு புரியாது ..



இணையத்திலிருந்து
Join Only-for-tamil

வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.


Sontha Mannil

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


மகளிர் பற்றி இணையத்தில் படித்தது - படித்ததில் பிடித்தது

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.

2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால் விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.

3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.

4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.

5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.

6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

7. ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்புவதில்லை.

நன்றி -சுபா ஆனந்தி

தமிழ் த் தாயகத்துக்காக
சாயிபாபா 

svsaibaba@yahoo.com>

மனதைத் தொட்ட வரிகள்!

Posted by K. Ezhil Kumar | | Category: | 0 comments


Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய
சம்பாதிக்கலாம்.

Ø உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.

Ø ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்
மிதித்தாலும் மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான் செய்யும்.

Ø சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்.

Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக இருத்தல்
Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத்
தெரியாது. பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது.

Ø மது உள்ளே சென்றால்
அறிவு வெளி செல்கிறது.

Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு.
விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே!

Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும்
சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே!

Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான்
என்பது இல்லை!

Ø நாக்கு கொடிய மிருகம்.
அதை எப்போதும் கட்டியே வை!
Ø பறக்க விரும்புபவனால் படர
முடியாது.

Ø மகிழ்ச்சியான
வாழ்க்கை என்பது தடைகளற்ற
வாழ்க்கை அல்ல,
தடைகளை வெற்றி கொண்டு வாழும்
வாழக்கை.

Ø ஒரு கதவு மூடப்படும்
போது மற்றொரு கதவு திறக்கிறது.
ஆனால், நாம் மூடப்பட்ட
கதவையே பார்த்துக்
கொண்டு திறக்கப்படும்
கதவை தவறவிடுகிறோம்.


Rajesh india
alwayssmileon@gmail.com>